காசா பகுதியில் உள்ள புற்று நோய் மருத்துவமனை மீது தாக்குதல்

காசா பகுதியில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை இதுதான் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கி-பலஸ்தீன நட்பு மருத்துவமனை என்று பெயரிடப்பட்ட இந்த மருத்துவமனை, துருக்கியின் ஆதரவுடன் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles