காடழிப்பை’கையிலெடுக்கிறது ஐ.ம.ச! 23 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்!!

காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலை பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 3 மணிக்கு குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, காடழிப்பு உட்பட சுற்றாடலுக்கு இழைக்கப்படும் தீங்குகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அதன்பின்புலத்தில் உள்ள அரசியல் கரங்களை அம்பலப்படுத்துவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஐவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, புத்திக பத்திரண, காவிந்த ஜயவர்தன, மயந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

Related Articles

Latest Articles