‘காட்டிக்கொடுக்க வேண்டாம்’- சிவநேசனுக்கு இ.தொ.கா. இளைஞர் அணி தலைவரும் பதிலடி!

” பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் சந்தா பணத்தை அறவிடுகின்றது. வாக்குகளையும் பெறுகின்றது. எனவே தொழிலாளர்களின் நலனிலும் உரிமைகளிலும் அவர்களும் அக்கறை செலுத்த வேண்டும். அதை விடுத்த காட்டிகொடுப்புகளை செய்ய கூடாது.” – என்று இ.தொ.காவின் இளைஞர் அணி தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

சிவநேசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” கடந்த பல்வேறு வருடங்களாக பேசு பொருளாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாய் விடயம் தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முயற்சியின் ஊடாக நிறைவேறியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன் அப்போது இ.தொ.கா வின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானால் ஆயிரம் ரூபாய் தொடர்பான கோரிக்கை முன்வைக்கபட்ட போது தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என்று வழங்கப்பட்ட உறுதி மொழியை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

இதற்கான முழுமையான நடவடிக்கையினை இ.தொ.கா வின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ஜீவன் தொண்டமான் முன்னெடுத்திருந்தார். இந்நிலையில் ஆயிரம் ரூபாய் சம்பள தொகையை வழங்க வேண்டும் என வர்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இது மலையக மக்களுக்கு கிடைத்துள்ள பாரிய வரப்பிரசாதம் ஆகும்.

இவ்வாறு ஆயிரம் ரூபாய் சம்பளம் உறுதியாகியுள்ள நிலையில் வழமை போன்றே எதிர் தரப்பினர் பல்வேறு விமர்சனங்களையும் அரசியல் இலாபத்திற்கு அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்ற நிலையில் தொழிலாளர் தேசிய சங்க இளைஞர் அணி தலைவரும் ஏதோ உளறுகின்றார். கடந்த பல வருட காலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளது,

தொழிலாளர்கள் தலைநிமிர்ந்து கௌரவமாக தொழில் செய்ய இ.தொ.கா முன்னின்னு சேவை செய்துள்ளது. அந்த வகையில் தற்போதும் தொழிலாளர்களின் உரிமைக்கும் அவர்களின் கௌரவத்திற்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

ஆயிரம் ரூபாய் சம்பள தொகை வழங்கினால் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகள் இல்லாமல் போகும் என்பது எதிர்தரப்பினர் அரசியல் இலாபத்திற்கென கூறும் கருத்தாகும். ஒரு போதும் தொழிலாளர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளும் உரிமைகளும் இல்லாமலாகது. அதற்கு ஒருபோதும் இ.தொ.கா வும் இராஜாங்க அமைச்சர் கௌரவ. ஜீவன் தொண்டமானும் இடமளிக்கபோவதில்லை. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அறிக்கை விடுவதை தவிரத்துக்கொண்டு மக்களின் நலன்சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது.

அத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞன் அணி தலைவர் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும் அவர் சார்ந்ந தொழிற்சங்கமும் பெருந்தோட்ட தொழிலாளர்களிடம் சந்தா பணத்தை அறவிடுகின்றது.வாக்குகளையும் பெறுகின்றது. எனவே தொழிலாளர்களின் நலனிலும் உரிமைகளிலும் அவர்களும் அக்கறை செலுத்த வேண்டும். அதை விடுத்த காட்டிகொடுப்புகளை செய்ய கூடாது.” – என்றார்.

Related Articles

Latest Articles