காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி குளம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

ஆரையம்பதியைச் சேர்ந்த 57 வயதுடைய வீரக்குட்டி தவராஜா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களாகக் குறித்த நபர் காணாமல்போயிருந்த நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது திருநீற்றுக்கேணி குளம் பகுதியில் காணாமல்போனவரது பாதணி இருப்பதைக் கண்டு குளப்பகுதியில் தேடிய போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வலிப்பு நோயினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரியின் உத்தரவுக்கமைய காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுமணிமாறன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சடலத்தைப் பார்வையிட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles