காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா

 

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
காதலருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா - வைரலாகும் வீடியோ
இந்நிலையில், நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். விஐபி தரிசனம் மூலம் இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Related Articles

Latest Articles