காதலியின் வீட்டுக்குள் புகுந்த காதலனுக்கு நேர்ந்த கதி

வீட்டுக்கு வருமாறு காதலி விடுத்த அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்குச் சென்று அவரது அறையில் காதல் சுகம் அனுபவித்துக்கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை, காதலியின் தந்தை பிடித்து ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனது வீட்டுக்குள் திருட்டுத்தனமாக உள் நுழைந்து புதல்வியின் அறையில் தங்கி இருந்ததாகக் கூறி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கான்ஸ்டபிளை, கைது செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. காதலி 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பித்ததாகவும் இல்லாவிட்டால் அவர் தற்போது சிறையில் இருந்திருப்பார் என்று உயிர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles