காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் காதலன், பிலயந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த அயிஷா லக்மினி (வயது 26) என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்துள்ளார். குறித்த பெண் 3 வருடங்களாக சந்தேக நபருடன் பழகி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக காதல் தொடர்பை துண்டிக்க முற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.










