காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொலை செய்த தாய் மற்றும் மகன்

தந்தையொருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியினால் தாக்கி கொலைசெய்த கொடூர சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை- கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் 33 வயதான மனைவியும் அவரது 17 வயதான மகனுமே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை துன்புறுத்தியதே கொலைக்கான காரணம் என சந்தேக நபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்த கொலையை செய்து, மகனுடன் சேர்ந்து சடலத்தை காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles