தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள காலி மாநகரசபை உறுப்பினர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டு எதிரணியை பிரதநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் என ஐவர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
காலி மாநகரசபையின் விசேட அமர்வு நேற்று நடைபெற்றது.
இதன்போது சபையின் நடவடிக்கைக்கு கூட்டு எதிரணியால் குழப்பம் விளைவிக்கப்பட்டது.
அத்துடன், காலி மாநகரசபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலி மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டே எதிரணி உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.










