திருகோணமலையில் இழுவைப்படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக இ.தொ.காவின் உப தலைவரும்,பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்த நிலையிலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இவ்விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,14 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு, வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்துக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்பாகவும், வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.










