கிராமப்புற விவசாயத்தைப் பலப்படுத்தும் கிரிஸ்புரோ

கந்தளாய் சூரியபுர தண்ணீர் பிரச்சினையை தீர்த்து கிராமப்புற விவசாய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பலப்படுத்துகிறது கிரிஸ்புரோ

 

இலங்கையில் முன்னணி மற்றும் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோ நிறுவனம், கந்தளாய் சூரியபுர விவசாய கிராமத்தில் குடிநீர் வேலைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இரு போகங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு தேவையான அடித்தளமொன்றை உருவாக்க முடிந்துள்ளது. நீண்டகால யுத்தத்தில் மற்றும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள கந்தளாய் சூரியபுர மற்றும் ஹெலஓயா போன்ற கிராமங்களில் வாழும் மக்களின் விவசாயத்திற்கான தண்ணீர் தேவையானது நீண்டகாலமாக கிராம மக்களால் எதிர்கொள்ளப்பட்டு வந்த பிரச்சினையாக இருந்ததுடன் கிரிஸ்புரோ நிறுவனம் கிராம மக்களின் தேவையை புரிந்து கொண்டு விவசாய சங்கங்கள், மகாவலி வேலைத்திட்டம் மற்றும் நீர்பாசன திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து நிரந்தரமான கால்வாய் ஒன்றை சூரியபுர மற்றும் ஹெலஓயா போன்ற பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுத்ததுடன் அதன்படி இரு போகங்களிலும்; விவசாயம் செய்வதற்கு இங்குள்ள விவசாயிகளுக்கு முடிந்துள்ளது.

மகாவலி கங்கை இந்த கிராமங்கள் வழியாக சென்றாலும் அது பிரதான கங்கையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் கால்வாய் ஒன்றை அமைத்து அதனூடாக தண்ணீரைப் பெற்றுக் கொள்ள விவசாய சங்கங்களினால் முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் பல தடவைகள் அரசியல் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை செய்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிரிஸ்புரோ நிறுவனம் கந்தளாய் சூரிய புர பகுதியை அண்மித்த பகுதிகளில் பெரிய அளவில் விவசாயத்தை மேற்கொண்டு செல்வதுடன் அங்கு முழுமையாக விதை நெல் உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றது. ஹெலஓயா விவசாய சங்கத்தினால் கிரிஸ்புரோ நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய கிரிஸ்புரோவினால் இந்த கால்வாய் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழிற்நுட்ப அனுமதியைப் பெற்றுக் கொடுக்க மகாவலி திட்டம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கிரிஸ்புரோ நிறுவனத்திடமுள்ள அகழ்வு இயந்திரங்கள் மற்றும் நில செயற்பாட்டு உபகரணங்கள் (Earth Moving Equipment) ஆகியவற்றை இலவசமாக இந்த வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கந்தளாய் ஹெலஓயா விவசாய சங்கத்தின் தலைவர் ஜீ.ஜீ. பந்துல, ‘யுத்தத்தின் பின்னர் சிறு மற்றும் பெரும் போக விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக முயற்சி எடுத்தாலும் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையொன்று எமக்கு இருக்கவில்லை. மழை நீரூம் நிச்சயமற்ற மட்டத்தில் இருப்பதனால் வருடத்தின் பெரும்பாலான காலப்பகுதி வரட்சியால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையை இல்லாமல செய்வதற்கு வருடம் முழுவதிலும் மகாவலி கங்கை நீரை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாக பிரதான கங்கையிலிருந்து 4 கிலோ மீற்றர் தூரம் வரை கால்வாய் அமைப்பது முக்கியமாக இருந்தது. இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இறுதியாக கிரிஸ்புரோ நிறுவனம் இதற்கு தலையிட்டு தமது ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொடுத்ததால் நீண்டகாலமாக கனவாக இருந்த எமது நோக்கத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு இப்போது எங்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.’ என தெரிவித்தார்.

கோழிப் பண்ணை மற்றும் பெரிய அளவிலான நெல் மற்றும் சோளச் செய்கை நிலங்களை நடத்திச் செல்வதனால் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் மற்றும் அதனூடாக கிராமிய வறுமையை குறைப்பதற்கும் கிரிஸ்புரோ தமது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் அமோரேஷ் செலர், ‘கிரிஸ்புரோ பெறுமதி மிக்க நிறுவனங்கள் மத்தியில் முன்னிலையிலுள்ள கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பில் முற்றிலும் முக்கியமான கவனம் செலுத்தும் நிறுவனமாகும். விசேடமாக புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது மட்டுமன்றி விவசாயத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக தோல்கொடுப்பதன் மூலம் கிராமிய வறுமையை குறைப்பதற்கும் கிரிஸ்புரோ தேசிய நிறுவனமாக பாரிய பங்களிப்பினையும் வழங்குகிறது. கந்தளாய் சூரியபுர மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புதற்காகவும் புதிய தொழில்களை ஆரம்;பிப்பதற்கு கைகொடுப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் விவசாய அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வழிகளின் ஊடாக அந்த நோக்கங்களை அடைவதற்கும் கிரிஸ்புரோ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.’ என தெரிவித்தார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Related Articles

Latest Articles