மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவின் மகளான ஷாமி கிரியல்ல போட்டியிடவுள்ளார் என தெரியவருகின்றது.
மத்திய மாகாணசபைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, மைத்திரிபால சிறிசேனவின் மகள் வடமத்திய மாகாணத்தில் போட்டியிடுவார் என முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போது அது கேள்விக்குறியாகியுள்ளது.
தேசிய மட்டத்திலான தேர்தலொன்றில் போட்டியிடவே அவர் உத்தேசித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.