கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்ற ஜீவன் தொண்டமான்!

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கடந்த காலங்களில் பல்வேறு குறைப்பாடுகள் நிலவிவந்தன. வைத்தியசாலை கட்டிடத்தை அண்மித்த பகுதிகளிலே பாதுகாப்பு சுவர் அமைப்பது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு அண்மையில் நிறைவு செய்யப்பட்டது.

மேலும் வைத்தியசாலையில் அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பகுதிகளையும் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட அபிவிருத்தி பணிகளை கண்காணிக்கவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேல் உட்பட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர் .

டிக்கோயா வைத்தியசாலைக்கு சுமார் 20.0 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலைப்பாடுகள் கடந்த காலங்களில் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles