கிழக்கு ஆளுநராகிறார் செந்தில் தொண்டமான் – புதன் கிழமை நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநராக எதிர்வரும் புதன்கிழமை நியமிக்கப்படவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதன்படி புதிய ஆளுநர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர். அந்தவகையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் பதவி செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்படவுள்ளது

Related Articles

Latest Articles