குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் HNBஇன் புதிய சிறு வாடிக்கையாளர் நிலையத்தை திறந்து வைத்தார் மத்திய வங்கி ஆளுநர்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முறையான வழிகளில் எவ்வித இடையூறும் இல்லாத வங்கிச் சேவையை எளிதாக்குவதற்கு, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தனது புதிய சிறு வாடிக்கையாளர் நிலையத்தை திறந்துள்ளது.

கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள HNBஇன் மினி வாடிக்கையாளர் மத்திய நிலையம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்புதல், ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பது போன்ற வங்கிச் சேவைகளுக்கான வசதிகள் இதனூடாக வழங்கப்படும்.

HNBயின் மொபைல் பேங்கிங் செயலி மற்றும் டிஜிட்டல் பணப்பை SOLO மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றவும் மற்றும் வங்கி வசதிகளைப் பயன்படுத்தவும் முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், HNB முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம் நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மினி வாடிக்கையாளர் நிலையத்தின் ஊடாக எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பணத்தை பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான முறையான வீட்டிற்கு அனுப்ப சிறந்த ஊடகமாக தமது சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“கடந்த தசாப்தத்தில் இலங்கையின் அந்நியச் செலாவணி வரவின் மிகப்பெரிய ஒற்றை ஆதாரமாக வெளிநாட்டில் தொழில்புரியும் தொழிலாளர்கள் அனும்பும் பணம் அமைந்தது. குறிப்பாக தொற்றுநோய் காலங்களின் போது, உலகெங்கிலும் உள்ள இலங்கையர்கள், தமது வருமானத்தை நம்பியிருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்காகவும், கல்விக்கு நிதியளிப்பதற்காகவும் தொடர்ந்து நிதிகளை அனுப்பியுள்ளனர்.

தொற்றுநோய் இந்த முறைகளை சீர்குலைத்துள்ளது, மேலும் மிகவும் குறைவான பாதுகாப்பற்ற முறைசாரா அலைவரிசைகளின் பயன்பாடு அதிகரிக்க வழிவகுத்தது.

“இந்த புதிய மினி வாடிக்கையாளர் நிலையத்தின் திறப்பு, HNB ஆரம்பிக்கப்படும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் சமீபத்தியது, நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதிச் சேவையை உறுதி செய்வதற்காக, முறையான பணம் அனுப்பும் வலைப்பின்னல்களின் அணுகல் மற்றும் செயல்திறனை சீராக்க உதவும் மத்திய வங்கியின் முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளது.

அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானத்தை வீட்டிற்கு அனுப்பும்போது பாதுகாப்பான மற்றும் விரைவான முறைமைகளை அணுகலாகும். எனவே, CBSLஇன் அனுசரணையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் ஒரு சிறிய வாடிக்கையாளர் நிலையத்தை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் கூறினார்.

வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வர்த்தக நடவடிக்கைகளுகாக திறந்திருக்கும், புதிய நிலையம் டிஜிட்டல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி சேவைகளை வழங்குவதற்கு வசதியாக அமைந்துள்ளதுடன், இது எதிர்காலத்தில் புலம்பெயர்ந்து தொழில்புரிவோருக்கு மிகவும் பொருத்தமானது மற்றும் HNBஇன் தலங்கமை வாடிக்கையாளர் நிலையத்தின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

HNBஇன் உலகளாவிய வலையமைப்பு, உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற பரிவர்த்தனை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட பங்ககுதாரர்களளுடன் கைகோர்த்துள்ளது, இங்கு இலங்கை ரூபாவுடன் (LKR) 13 நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் வைப்பு செய்யலாம்.

பெறுநர்களுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்புவதை வசதியாக அணுகுவதற்கு வங்கி பல பணப் பரிமாற்ற தீர்வுகளை வழங்குகிறது. நாடு முழுவதிலுமுள்ள அதன் கிளைப் பீடங்களில் பணத்தைப் பெறுவதற்கும், 780+ ATMகளில் உள்ள ‘கார்ட் இல்லாத பணம் மீளப் பெறும் வசதி’யைப் பயன்படுத்தி ATMகள் மூலம் பணத்தைப் பெறுவதற்கும் வங்கி உதவுகிறது. HNB வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை உடனடியாக வேறு ஏதேனும் உள்ளூர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கிறது.

தடையற்ற பரிமாற்றத்தை உறுதி செய்வதற்காக, ஆண்டு முழுவதும் 24×7 என்ற அடிப்படையில் பணம் அனனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கி செயல்படுத்துகிறது.

நாடு முழுவதும் 254 வாடிக்கையாளர் நிலையங்களைக் கொண்டுள்ள HNB இலங்கையின் மிகப் பெரிய, தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான வங்கிகளில் ஒன்றாகும், டிஜிட்டல் வங்கியில் ஒரு புதிய முன்னுதாரணத்தை முன்னோக்கி செலுத்துவதற்கான அதன் முயற்சிகளுக்காக உள்ளூர் மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

HNB ஆனது Fitch Ratings (Lanka) Ltdஇன் தேசிய மதிப்பீட்டில் AA- (lka)ஐப் பெற்றுள்ளது. மதிப்புமிக்க பிரிட்டனை தளமாகக் கொண்ட பேங்கர் சஞ்சிகையால் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக உலகின் சிறந்த 1,000 வங்கிகளின் பட்டியலில் வங்கியும் இடம் பெற்றுள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் விருதுகள் 2020இல் HNB இலங்கையின் சிறந்த துணைக் காப்பாளர் (Sub-Custodian) வங்கியாகவும் அறிவிக்கப்பட்டது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles