குட்டி தேர்தலில் வெற்றி உறுதி – நாமல்

“ ரணில் விக்கிரமசிங்க ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

உரிய திகதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்தால் அதிக சபைகளைக் கைப்பற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியடையும் என்றும் அவர் அடித்துக் கூறினார்.

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஏன் ஜனாதிபதியாக நியமித்தோம் என்று பலரும் கேள்விகளை எழுப்புகின்றார்கள். மக்கள் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பிரதமரை வேண்டாம் என்றார்கள். அதனால் பிரதமர் பதவிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகினார். 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதியை வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்ற உறுப்பினரக்ளின் வீடுகளையும் அவர்கள் எரித்தார்கள்.

மொட்டுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி வேண்டாம் என்பதுதானே இதன் அர்த்தம். ஆகையால் மொட்டில் இருந்து ஒருவரை நியமிக்கும் உரிமை எங்களுக்கு இல்லை.

அதனால்தான் நாம் ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்தோம். எங்களுக்கு அப்போது இருந்த மாற்று வழி அது ஒன்றுதான்.

மேலும், அவர் ஒரு திறமைசாலி; அனுபவசாலி. இந்தப் பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கக்கூடியவரும் அவரே. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்கினோம்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles