ரணில், சஜித் அணிகளின் சங்கமம் உறுதி!

ஐக்கிய மக்கள் சக்தியும், தமது கட்சியும் இணைவது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, இரு தரப்பு இணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ இரு கட்சிகளும் உரிய நேரத்தில் உரிய வகையில் இணையும். கிராமிய மட்டத்தில் இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டனர்.” – என்றார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி ஜனநாயக வழியிலேயே ஆட்சியைக் கைப்பற்றும் எனவும், தமது ஆட்சி தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்றெல்லாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கதைகூறி வருகின்றது எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles