2029 இல் நாமலை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

” 2029 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும். நாமல் ராஜபக்சஷ ஜனாதிபதியாவார். இந்த இலக்கை நோக்கிய எமது வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“2029 ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெறுவோம். நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். அதற்குரிய சிறந்த வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்கேற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

எமது அணியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறும். அதற்குரிய ஆரம்பக்கட்டப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் எமது கட்சியின் வளர்ச்சியை நீங்கள் காணலாம். அடுத்த மாதம் முதல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். எங்களது வியூகத்தை முன்கூட்டியே வெளியிட மாட்டோம்; அடுத்த மாதமே அதனை வெளிப்படுத்துவோம்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles