உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
” மார்ச் 19 ஆம் திகதிக்குள் 340 உள்ளாட்சிமன்றங்களை நிறுவுவதற்கு வழிவகை செய்யும் வகையில், மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்றும் நாளை நடைபெறவுள்ளது.