உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்த முடியும். எனினும், 8,9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் செலுத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை மார்ச் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ளது.










