குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் மகா சங்கத்தினரும், இந்து மத தலைவர்களும் பேச்சு நடத்தினால் தீர்வு கிட்டும்

” குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் மகாசங்கத்தினரும், இந்து மதத்தலைவர்களும் இணைந்து பேச்சு நடத்தினால் சமுக தீர்வை எட்டக்கூடியதாக இருக்கும். ஏனெனில் சில அரசியல்வாதிகள் இதனை வாக்கு வேட்டைக்காக பயன்படுத்துகின்றனர்.”

இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் அது சம்பந்தமாக செயற்பட்டுவரும் பிக்குகளுடன் கலந்துரையாடியுள்ளேன், அத்துடன், இது சம்பந்தமாக கதைக்கும் தமிழ் எம்.பிக்களுடனும் (கஜேந்திரகுமார் அல்லர்) பேச்சு நடத்தியுள்ளேன்.

அண்மையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. இதன்போது வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் கதைத்தேன், இதன்போது இங்கு பிரச்சினை வேண்டாம், பேச்சுமூலம் தீர்வு காணலாம் என அவர் மக்களுக்கு சொன்னார்.

குறிப்பாக இந்து மத தலைவர்களுடன், எமது மகாசங்கத்தினர் கலந்துரையாடினால் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் வாக்குவங்கியை கருத்திற்கொண்டு இவ்விவகாரத்தில் சிலர் அரசியல் நடத்த முற்படலாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles