குறுக்கே பாய்ந்தது நாய் – பசறையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை, மடுல்சீமை வீதியில் கிகிரிவத்தை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை ஆட்டோவொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பசறையில் இருந்து எல்டப் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், ஆட்டோ கடுமையாக சேதமடைந்துள்ளது.

வீதியின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்ததாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles