குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியா, புரவுன்ன்சீக் தோட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நாட்களுக்கு முன்னர் விறகு சேகரிக்க சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே குளவிக்கொட்டுக்கு இலக்கானார்.
அவர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
கௌசல்யா