குளவிக்கொட்டுக்கு இலக்கான 8 மாணவர்கள் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல்வேளையிலேயே மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் 03 பொகவந்தலாவ எலிபடை தமிழ் வித்யாலயா மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
4 மாணவர்கள், 4 மாணவிகள் என மொத்தம் எட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு பின்புறத்தில் உள்ள பாரிய மரத்தில் குளவிகள் கூடு கட்டுவதால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றன எனவும், எனவே , மாணவர்களை பாதுகாப்பதற்குரிய பொறிமுறை அவசியம் எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
எஸ்.சதீஸ்










