நோர்வூட் ஸ்டோக்கோம் தோட்டத்தில் 15 தோட்டத் தொழிலாளர்கள் இன்று முற்பகல் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளையிலேயே அவர்கள்மீது குளவிகள் சரமாரியாக கொட்டியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.