புசல்லாவ சோகம தோட்ட கீழ்பிரிவு இலக்கம் 93 தேயிலை மலையில் குளவி கொட்டியதில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொன்டிருந்த தொழிலாளர்கள் 5 பேரை குளவிகள் கடுமையாக தாக்கியுள்ளது. புசல்லாவ மாவட்ட வைத்தியசாலைக்கு தோட்ட லொறி மூலமாக இவர்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். நால்வர் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.










