குழந்தை உட்பட மூவர் ரயில் மோதி மரணம்!

ரயில் மோதி குழந்தை உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் களுத்துறையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே மேற்படி மூவரும் உயிரிழந்தனர்.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு, ரஜவத்த பிரதேசத்தைச்  சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles