குழு மோதலில் ஒருவர் கொலை: தெமோதரயில் பயங்கரம்!

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில் பகுதியில் நேற்று (20) இரவு இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று (20) இரவு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த நபரை சவள் தாக்கியே கொலை செய்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதிய சவள் பொலிஸார் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உபுல் சந்தன, பண்டாரவளை பிரிவின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரதீப் கலுபான மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில் எல்ல பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.மயூரசிங்க உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles