கொழும்பில் நாளை முற்பகல் கூடும் தமிழ் பேசும் மக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கு பற்றும். ஆனால் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு தேர்தல்களில் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாகத் தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற விடயங்களுக்கு உட்பட்டதான ஆவணங்களில் மட்டுமே தமிழரசுக் கட்சி கையெழுத்திட வேண்டும்.
இவ்வாறு தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கொழும்பிலுள்ள சம்பந்தன் எம்.பியின் இல்லத்தில் கூடியது. இன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலையும் தமிழரசுக் கட்சியின் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
