கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – தொழிலாளர்கள் போராட்டம்

கண்டி மடுல்கலை தோட்ட மக்கள் கூட்டு ஒப்பந்தத்துடன் கூடிய ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அதாவது கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடத்தில் அடாவடியாக நடந்து கொள்வதாகவும் கூறியே இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்தங்கள் இல்லாமையினால் பல இன்னல்களை அனுபவிப்பதாகவும் தோட்டத்தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.அதாவது கொழுந்து நிறை அதிகமாக கேட்கப்படுவதாகவும்,20 கிலோ கொழுந்து பறித்தாலும் அரை நாள் சம்பளமே வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

இதை தவிர சுகாதார வசதிகள்,தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இன்மை,தோட்டங்கள் காடாகுவது போன்ற பல பிரச்சனைகளை சந்திப்பதாகவும் இதற்கு ஒரே தீர்வு கூட்டுஒப்பந்தம் மாத்திரமே என வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Articles

Latest Articles