பொதுவாக இன்றைக்கு பலர் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.
இது ஏற்பட வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம் போன்றவை காரணமாக அமைகின்றது.
பொடுகின் தொல்லை அதிகமானால் முடியின் வேர்க்கால்கள் பலம் இழந்துவிடும். அதனால் முடி உதிர்வு அதிகமாகும்.
பொடுகு வந்தவுடனே அதை நீக்குவதற்கு எளிய வீட்டு வைத்தியங்களை செய்ய ஆரம்பித்துவிடவேண்டும். அப்பொழுதுதான் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.
தற்போது பொடுகை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
- சாம்பார் வெங்காயம் அதாவது சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து. பிறகு 15 நிமிடம் கழித்து குளிக்க பொடுகு தொல்லை நீங்கும்.
- பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்.
- வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
- பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு ரெம்ப நல்லது.
- வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
- அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின்னர் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
- வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம்.
- வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்க்கலாம். தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.
- மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும்.
- வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.