கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் 24ஆம் திகதி காலை 6.00 மணி வரையான 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles