‘கைது அச்சம்’ – ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்காதிருக்க புடின் முடிவு!

தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15 ஆவது உச்சி மாநாடு தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடினை கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. எனவே , புடின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யுமாறு கோரிக்கை மற்றும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம்.

இதனால் தென் ஆபிரிக்காவுக்கு கடும் இராஜதந்திர நெருக்கடிகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையிலேயே மேற்படி மாநாட்டில் புடின் பங்கேற்கமாட்டார் எனவும், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரே இதில் பங்கேற்பார் எனவும் தென் ஆபிரிக்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles