கடந்த சில நாட்களுக்குள் சுமார் 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசா மூலம் நாட்டிற்கு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய அவர்கள் நாட்டில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் குடிவரவு – குடியகல்வு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் அடிப்படையிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி, அத்துல்கோட்டை, பல்லேகல, நத்தரன்பொத்த உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து குறித்த சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.










