கொட்டகலையில் குளவி கொட்டு – 13 பேர் பாதிப்பு

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர்.

இச்சம்பவம் 29.09.2021 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவி கூடே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

(பத்தனை நிருபர்)

Related Articles

Latest Articles