திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவிலுள்ள வீட்டில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். 5 நிமிடங்களுக்கு பிறகு கேஸ் அடுப்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வீட்டாளர்கள் தெரிவித்தனர்.
வெடிப்பை அடுத்து கேஸ் அடுப்பு முழுமையாக சேதமமைந்துள்ளதுடன், அதன்பின்னர் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தாக வீட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.