கொட்டகலை பகுதியில் மந்த போசனையை போக்க பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் மாதாந்த சபை அமர்வு பிரதேச சபையின் பிரதான கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உப தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனைவரும் பங்கு கொண்டார்கள்.

இதன்போது கொட்டகலை பிரதேச சபைக்கு  இந்திய துணை உயர் அதிகாரி  காரியாலயத்தின் ஊடாக கொட்டகலை பிரதேச சபைக்கு அதிகளவான புத்தகங்கள் பெற்றுக்  கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த அலுவலகத்தின் ஊடாக  தோட்டப்புறங்களில் காணப்படும் நூலகங்களுக்கு தேவையான பல்வேறு புத்தகங்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல தோட்டப்புறங்களில் காணப்படுகின்ற சுகாதார நிலையங்களுக்கு தேவையான பல்வேறு மருந்து பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மந்த போசனை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போதைப் பொருட்களை விநியோகிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

மேலும் கொட்டகலை பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் தொடர்பாகவும் சபையில் கலந்துரையாடப்பட்டது.

Related Articles

Latest Articles