கொட்டகலை – தலவாக்கலை மூவருக்கு கொரோனா தொற்று

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிரேட்டன் தோட்டம் டிபி டிவிசனில் உள்ள ஒருவருக்கும், வூட்டன் ஹில்ஸ் தோட்டத்திலுள்ள ஒருவருக்கும், தலவாக்கலை தெவிசிறிபுர பகுதியைச் செர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்த தகவலை கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று முன்தினம்  (24) பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் PCR பரிசோதனை முடிவுகள் இன்று (26) வெளிவந்தன.இதில் மூவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவர்களே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர், அவர்களில் மூவருக்கெ வைரஸ் தொற்றியுள்ளது.

Paid Ad