2021 ஆம் நிதியாண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கொட்டகலை பிரதேசசபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது தவிசாளரால் பாதீடு முன்வைக்கப்பட்டது. பட்ஜட்டுக்கு ஆதரவாக 14 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஒரு உறுப்பினர் சமூகமளிக்கவில்லை. எதிராக ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.










