பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை முன்னெடுக்கப்படும் ‘உள்ளூராட்சி வாரத்தின்’ ஆரம்ப நாள் நிகழ்வு, இன்றைய தினம் (செப்டம்பர் 14) கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி, சபை உறுப்பினர்கள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், திம்புளை-பத்தனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கொட்டகலை தபால் நிலைய அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன், முன்னாள் செயலாளர் விஜேசுந்தரம் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரம் கொட்டகலை பிரதேச சபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.










