கொத்தாக சடலங்கள் தோண்டியெடுப்பு ; வெளியான பின்னணி

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியாக இருந்த மக்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கென்யாவின் கடலோர கிராமமான மலிந்தியிலேயே மத போதகர் ஒருவரின் பேச்சை நம்பி பட்டினியிருந்த மக்கள் 21 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் மீட்கப்பட்ட சடலங்களில் சிறார்களும் உட்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், குறித்த பகுதியில் மேலும் அதிக சடலங்கள் காணப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஷகோலா வனப்பகுதியில் இருந்து கடந்த வாரம் மிக மோசமான நிலையில் 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அருகாமையில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தின் உறுப்பினர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த தேவாலயத்தின் மத போதகரான பால் மெக்கென்சி என்தெங்கே பொலிசாரிடம் சிக்கியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இதுவரை 58 சவக்குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதில் தாம் தவறேதும் செய்யவில்லை என போதகர் மெக்கென்சி தெரிவித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பிணை அளிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. தமது தேவாலயத்தை 2019ல் மூடிவிட்டதாக மெக்கென்சி குறிப்பிட்டாலும், அது நம்பும்வகையில் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடவுளை நேரில் காண பட்டினியாக இருக்க தமது தேவாலய உறுப்பினர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். மீட்கப்பட்ட சடலங்களில் டி.என்.ஏ சோதனை முன்னெடுக்கப்பட்டு உண்மையில் அவர்கள் பட்டினியால் தான் இறந்தார்களா என்பது உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத நம்பிக்கை மிகுந்த நாடான கென்யாவில் இதுபோன்ற வழக்குகள் இதற்கு முன்னர் பலமுறை, பல கட்டங்களில் நடந்தேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles