கொத்மலை பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலையொன்றை திருடிய பெண் ஒருவரைப் பொலிஸார் சிலையுடன் கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட சிலையை பஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் போது யக்கலைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார் மடக்கிபிடித்துள்ளனர். இதன்போது அவரிடமிருந்த சிலையையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வத்தளைப் பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் ஒருவர் ஒரு குழுவினருடன் கொத்மலை பிரதேசத்தில் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த போது மேற்படி ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனர். இதன்போதே சிலையை களவாடியுள்ளார்.
சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் இல்லாமல் இருப்பதைக் கண்ணுற்ற பூசாரி சீ.சீ.டி.வி உதவியுடன் தேடியுள்ளார். அப்போது பெண் ஒருவர் அதனை திருடுவதை கண்ட அவர், காட்சிகளுடன் கொத்மலை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட வாகனம் பற்றிய தகவலை சீ.சீ.டீ.வி உதவியுடன் திரட்டி தகவல்களை பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் யக்கல பொலிஸார் சுற்றுலா பஸ் வண்டியை இனம் கண்டு பரிசோதித்தபோது சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.










