கொத்மலை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சபையின் தலைவர் எம்.ஜி.ஏ.கே. முரமுதலி தலைமையில் நடைபெற்ற சபைக் கூட்டத்தொடரில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சபைக் கூட்டத்தில் பங்கேற்ற 50 உறுப்பினர்களில் 29 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும், 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும், மூன்று உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்தனர்.
இதேவேளை, குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவதாக சபையின் உப தலைவர் சண்முகதாஸ் ரஞ்சி தெரிவித்தார்.










