‘கொரோனாவால் அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி – இத்தாலியிலும் கோரத்தாண்டவம்!

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 ஆக உள்ளது.

ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 235 ஆக உள்ளது.

அதேவேளை, கொரோனாவால் அமெரிக்காவில் 507,746 பேர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 156,240 பேரும், பிரேசிலில் 244,955 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Paid Ad