“பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!

பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!

பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள பாடசாலை பழைய மாணவர்களுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் லீக் போட்டி “பாரதியன்ஸ் பிரிமியர் லீக் ” என்ற பெயரில் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி பதுளை கிரிக்கெட் மைதானத்தில் பாடசாலையின் அதிபர் சொ.திருச்செல்வம் தலைமையில் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் என்.சத்தியராஜ் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;

பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் அணிக்கு 7 பேர் கொண்ட அணியினர் பங்குபற்றவுள்ளனர்.

இவ்வாறு போட்டியில் பங்குபற்றவுள்ள அணிகள் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதிக்கு முன்னதாக தமது அங்கத்துவ கட்டணங்களை பழைய மாணவர் சங்கத்தின் பதுளை மக்கள் வங்கி கணக்கு இலக்ககமான 010100130060170 இற்கு செலுத்தி போட்டியில் பங்குபற்ற முடியும்.

இப்போட்டியில் அங்கத்துவத்தைப் பெற்று கொள்ளவதற்கான தகவல்களை கே.ஸ்ரீ ஹரன்-0779091413, ஆர். விக்னேஸ்வரன் – 0769265258, எஸ்.யசோதராஜன்- 0774194341 ஆகிய பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பசறை நிருபர்

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles