‘கொரோனாவால் நுவரெலியாவில் இதுவரை 455 புர் உயிரிழப்பு’

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 4 மணி வரை 455 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் அம்பகமுவ பிரதேசத்தில் 140 பேரும், நுவரெலியா பிரதேசத்தில் 139 பேரும், கொத்மலை பிரதேசத்தில் 68 பேரும்,வலப்பனை பிரதேசத்தில் 64 பேரும் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 44 பேரும் உயிரிழந்துள்ளார்கள்.

நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13 சுகாதார பிரிவுகளை அடங்கிய நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து நேற்று (14 ) மாலை 4 மணிவரை 465 உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் கொவிட் 19 கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு பிரிவினரால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை 4 மணிவரையிலான 24 மணித்தியாலயத்தில் வலப்பனை பிரதேசத்தில் மாத்திரம் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல நுவரெலியா பிரதேசத்தில் 10பேருக்கும், ஹங்குராங்கெத்த பிரதேசத்தில்09 பேருக்கும், வலப்பனை பிரதேசத்தில் 05 பேருக்கும், அம்பகமுவ பிரதேசத்தில் அஒருவருக்கும், கொத்மலை பிரதேசத்தில்ஒரருவருமாக26 பேருக்கு கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை அம்பகமுவ பிரதேசத்தில் 2314 குடும்பங்களைச் சேர்ந்த 4024பேருக்கும், நுவரெலியா பிரதேசத்தில் 1989 குடும்பங்களைச் சேர்ந்த 4353 பேருக்கும், வலப்பனை பிரதேசத்தில் 1403 குடும்பங்களைச் சேர்ந்த1501 பேருக்கும், கொத்மலை பிரதேசத்தில் 1365 குடும்பங்களைச் சேர்ந்த 2050 பேருக்கும், ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 1216 குடும்பங்களைச் சேர்ந்த 850பேருக்கும், மொத்தமாக 8287 குடும்பங்களைச் சேர்ந்த12778 பேருக்கும் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள் ளார்கள்

இதில் 13 சுகாதார பிரிவுகளான அம்பகமுவ பிரதேசத்தில் 2046பேருக்கும், பொகவந்தலாவ பிரதேசத்தில் 1184 பேருக்கும், ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் 601பேருக்கும், கொட்டகலை பிரதேசத்தில் 918 பேருக்கும், கொத்மலை பிரதேசத்தில் 1032 பேருக்கும், லிண்டுல பிரதேசத்தில் 1109 பேருக்கும், மஸ்கெலியா பிரதேசத்தில் 794பேருக்கும், மதுரட்ட பிரதேசத்தில் 249 பேருக்கும், நுவரெலியா மாநகரபை எல்லைக்குள் 686 பேருக்கும் , நவதிஸ்பன பிரதேசத்தில் 1018 பேருக்கும்,நுவரெலியா பிரதேசத்தில் 1640 பேருக்கும், இராகலை பிரதேசத்தில் 789 பேருக்கும், வலப்பனை பிரதேசத்தில் 712 பேருமாக மொத்தம் 12778 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப் பட்டுள்ளனர். என. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிட்டுள்ளனர்.

Paid Ad
Previous articleஇலங்கை கிரிக்கட் வீரர்கள் இருவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.
Next article‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து