கொரோனாவால் பதுளையில் மேலும் நால்வர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் 23-11-2021 (இன்று) நால்வர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பதுளை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களில் எண்ணிக்க 490 ஆக அதிகரித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமே, இம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

பதுளை – 65 பேர், பண்டாரவளை – 55 பேர், எல்ல – 12 பேர், ஹல்துமுள்ளை – 23 பேர், ஹாலிஎலை – 53 பேர், அப்புத்தளை – 41 பேர், கந்தகெட்டிய – 07 பேர், லுணுகலை – 15 பேர், மகியங்கனை – 60 பேர், மீகாகியுல – 12 பேர், பசறை – 31 பேர், ரிதிமாலியத்தை – 12 பேர், சொரணாதொட்டை – 10 பேர், ஊவா பரணகமை – 33 பேர், வெலிமடை – 61 பேர் என்ற வகையில் மொத்த மரணங்கள் 490 பேராகும்.

ஆரம்பம் முதல் 23-11-2021 வரையிலான காலப்பகுதியிலேயே, இம் மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேற்படி 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 23-11-2021 மட்டும் 84 பேருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்த தொற்றாளர்களாக 31 ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு (31254) பேர் பதிவாகியிருக்கின்றனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles