‘கொரோனா’வால் மாத்தளையில் இதுவரை நால்வர் உயிரிழப்பு

மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் இருவரும் பெண்களாவர்.

அதற்கமைய மாத்தளை மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி தெரிவித்தது.

80 வயதுடைய பெண்ணொருவர் மாத்தளை வரக்காமுறை, மட்டாவ வீதியிலுள்ள தனது வீட்டில் உயிரிழந்ததை அடுத்து சடலம் மாத்தளை தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

மற்றுமொரு கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தெல்தெனிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles