கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 63 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இரு மணித்தியாலயங்களில் அவர் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி வைத்தியசாலையிலும் கடந்த வாரம் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










