கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 33 பேர் நேற்று (09) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 19 ஆண்களும், 14 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.










